50 கடைகள் இரண்டாக உடைப்பு - மாநகராட்சி நடவடிக்கை - வாக்குவாதம்

50 கடைகள் இரண்டாக உடைப்பு - மாநகராட்சி நடவடிக்கை - வாக்குவாதம்

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். பல்வேறு சிறப்புகளை கொண்ட திருச்சி மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இது மட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை நாள்தோறும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பிடித்த செல்கின்றனர்.

 இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள பிரதான சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் அதிகளவு உள்ளன. இவற்றை இன்று மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் வாகனத்தைக் கொண்டு அப்புறப்படுத்தினர. அப்போது 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் இரண்டாக உடைக்கப்பட்டது.

பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன. இதைக் கண்டு ஆத்திரமடைந்த தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாநகராட்சியின் இத்தகைய செயலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறைப்படி அறிவித்திருந்தால் தள்ளுவண்டி கடைகளை நாங்களே அகற்றி இருப்போம் என போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஒத்தக்கடை, பறவைகள் சாலை, வில்லியம்ஸ் சாலை, ஜங்ஷன் ரயில் நிலையம் சாலை, உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் ஓரங்களில் இருந்த 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிக் கடைகள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision