திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்
ஒரு நாள் அரசு பயணமாக திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். சரியாக 9.25 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்துள்ளார்.
தமிழக முதல்வரை வரவேற்பதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி வருகை புரிந்துள்ளார். முதல்வரின் வருகையை ஒட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் பலத்த 6400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சிறப்பான வரவேற்பிற்கு ஏற்பாடு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (29.12.2022) திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் 2,764 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 78 கோடிவங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்குகிறார்கள்.
மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சார்பில் ரூபாய் 238.41 கோடி செலவில் 5,635 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கவும், ரூபாய் 308.29 கோடி மதிப்பிலான 5,931 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் 22716 பயனாளிகளுக்கு ரூபாய் 79.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO