இ-வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய இன்று (14.08.2021) வாய்ப்பு

இ-வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய இன்று (14.08.2021) வாய்ப்பு

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறையின்படி சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2021-ன் போதும் மற்றும் 2021-க்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு மின்-வாக்காளர் அடையாள (e-EPIC) அட்டையினை பதிவிறக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் பிரத்தியேகமாக 14.08.2021 காலை 11.00 மணியில் இருந்து இரவு 12.00 மணி வரை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இளம் வாக்காளர்கள் தங்கள் மின்-வாக்காளர் அடையாள அட்டையினை (e-EPIC) தங்களது அலைபேசி, கணிணி மற்றும் மடிக்கணிணி மூலம் பின்வருமாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://NVSP.in/

இணையதளத்தில் பதிவு செய்து உள் நுழைய வேண்டும். 

Voter helpline mobile app (Android/iOS) இணையதளத்தில் பதிவு செய்து உள் நுழைய வேண்டும்.

https://Voterportal.eci.gov.in/

இணையதளத்தில் பதிவு செய்து உள் நுழைய வேண்டும்.வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது படிவ எண்ணை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் OTP-ஐ சரிபார்த்து உள்ளிட வேண்டும்.

இ-வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்து தங்களது இ-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
இதுவரை இ-வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் எளிதாக பதிவிறக்கம் செய்துக்கொள்வதற்கு ஏதுவாக 14.08.2021 அன்று காலை 11.00 மணி முதல் இரவு 12.00 மணி வரையிலும் தத்தமது அலைபேசி வாயிலாகவும், கணிணி மற்றும் மடிக்கணிணி மூலமாகவும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதர விபரங்கள் மற்றும் சந்தேகங்களை அறிந்துக்கொள்ள சம்மந்தப்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்கள் (BLO), சம்மந்தப்பட்ட தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்களிடம் தொடர்பு கொண்டு இதுவரை e-EPIC பதிவிறக்கம் செய்யாத வாக்காளர்கள்  இவ்வாய்பினை முழுமையாக பயன்படுத்தி e-EPIC வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn