திருச்சியில் தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநில மாநாடு?

திருச்சியில் தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநில மாநாடு?

தமிழ்நாட்டின் மையப் பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சி அரசியல் கட்சி தொடங்கினாலும் அதன் பொதுக்கூட்டமும், மாநாடும் திருச்சியில் தான் தொடங்குகின்றனர். திருச்சியில் மாநாடு அல்லது பொதுக்கூட்டம் நடத்தினால் அது வெற்றியாக அமையும் என அரசியல் கட்சியை தொடங்கும் அனைத்து அரசியல்வாதிகளும் திருச்சி மாவட்டம் என்றாலே அது திருப்புமுனை தான் என்று நம்புகின்றனர். 

இந்த நம்பிக்கையை பொய்யாக்காத வகையில் நடிகர் விஜய் தாம் தொடங்கி உள்ள தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் மாநாட்டை திருச்சியில் நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி நடிகர் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக்கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் திருச்சிக்கு அடிக்கடி திடீர் விசிட் வந்த வண்ணம் உள்ளார். 

இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு திருச்சியில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என கூறப்படும் நிலையில், அதற்காக திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் பகுதி மற்றும் திருச்சி பிராட்டியூர் ஆகிய 2 இடத்தில் ஒன்றில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இதற்காக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் திருச்சி எஸ் ஆர் எம் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கூகுள் மேப்பில் மாநாடு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்கு முன்னதாக திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பணிகளை தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision