சுவரோவியம் மற்றும் பூச்செடிகள் - அழகிய முன்னெடுப்பில் பாதுகாக்கப்பட்ட முக்கிய சாலைகள்!!
திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் சிறுநீர் கழிப்பது, குப்பைகளை கொட்டுவது, உணவுக்கழிவுகளை வீசுவது போன்ற செயல்கள் சாதாரணமாக நடந்து வருகிறது. இது அதனை சுற்றியிருக்கும் பகுதியில் பெரும் சுகாதார பிரச்சனையாக உள்ளது.
சுவர்களில் மேற்கூறிய செயல்களை செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் எழுதுவது போன்ற திட்டங்கள் செயலலிக்காமல் போன நிலையில், புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது மாநகராட்சி. அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் இருக்கும் இது போன்ற பகுதிகளில் உள்ள சுவர்களில் அழகான, பல்வேறு வண்ணங்களில் சுவரோவியம் வரைவதுடன், சுவர்களை ஒட்டி சில அடிகளுக்கு பூந்தொட்டிகளை வைத்தும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் இந்த பகுதிகள் அழகாவதுடன், சுகாதார பாதிப்பு ஏற்படாதவண்ணம் தடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்பமாக வார்டு 18ல் உள்ள வெற்றிலைப்பேட்டை மற்றும் வார்டு 26ல் உள்ள புத்தூர் அல்லித்துறை ரோடு பகுதியில் உள்ள சுவர்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த பகுதிகளில் குப்பைகொட்டுவது முதலான பிரச்சனைகள் குறைந்துள்ளது. இந்த மாதிரியான முன்னெடுப்புகள் மாநகராட்சியின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision