மாநகராட்சி பள்ளி மற்றும் அம்மா உணவகத்தில் மேயர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று தேவர் ஹால் அருகில் உள்ள ஜான் பஜார் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காலை வழங்கப்படும் இட்லிக்கான பொருட்கள் மற்றும் மதியம் வழங்கப்படும் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதங்களை சாப்பிட்டு ஆய்வு செய்தார். வருகை பதிவேடு இருப்பு பொருட்களையும் ஆய்வு செய்து விபரங்களை கேட்டு அறிந்தார். பொது மக்களுக்கு சுவையாகவும் சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
பின்னர் ஜான் பஜார் மாநகராட்சி உருது பள்ளியில் அங்கன்வாடி மையத்தின் பணியாளர்கள் வருகை மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையை கேட்டறிந்து அவர்களுக்கு தரமான உணவுகளை வழங்கவும், தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார்.
மேலும் பாலக்கரை பகுதியில் உள்ள அறிவு சார் மையத்தில் மேயர் ஆய்வு மேற்கொண்டு அங்கு அரசு பல்வகை தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகளிடம் படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் ஏதும் தேவையா என்று கேட்டறிந்து இன்டர்நெட் வசதிகள் இருக்குதா என்று கேட்டறிந்தார். மாணவ மாணவிகள் இந்த மையத்தில் எங்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட் வசதிகள் போதுமான அளவு உள்ளது என்பதை தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வில் உதவி ஆணையர்கள் ஜெயபாரதி, சானலத் தவ வளவன், மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் மற்றும் உதவி பொறியாளர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision