திருச்சி VDart நிறுவனத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்

திருச்சி VDart  நிறுவனத்தில்  மகளிர் தினம்  கொண்டாட்டம்

திருச்சி VDart நிறுவனத்தில் நேற்று மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் தலைமை பண்பு வளர்ப்பதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை GWLI (GLOBAL WOMEN LEADERS INITIATIVE )மூலம் நடத்தி வருகின்றனர்.

 2019 தொடங்கப்பட்ட GWLI பெண்களுடைய தனித் திறமையை வளர்ப்பதற்கு பல வழிகளில் உதவி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் மகளிர் தினத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய திறமையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுடைய தயாரிப்பு பொருட்களை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்பித்து வருகின்றனர்.

வழங்கப்படும் பரிசுகள் தீங்கு விளைவிக்காத இயற்கை பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.

  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காவேரி மருத்துவமனை Digital transformation head தீக்க்ஷா செங்குட்டுவன் கலந்துக்கொண்டு "பெண்களின் இலட்சியம்" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியுள்ளார்.

 பின்னர் நிகழ்ச்சியின் முடிவில் கேக் வெட்டி மகளிர் தினத்தை நிறுவன பணியாளர்களுடன் கொண்டாடியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO