Child oral health day உடன் இணைந்து மகளிர் தின விழா கொண்டாட்டம்

Child oral health day உடன் இணைந்து மகளிர் தின விழா கொண்டாட்டம்

உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொருளாதார, கலாச்சார, அரசியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அவர்களின் சாதனைகள் உள்ளிட்டவற்றை போற்றும் வகையில் இந்த மகளிர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த மகளிர் தின கொண்டாட்டம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தோடு இணைந்து child oral health day அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அருண்ராஜ், குழந்தைகள் நலப்பிரிவின் துறை தலைவர் சிராஜூதீன் நஜீர் மற்றும் மைதிலி DEIC பல் மருத்துவர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. மேலும் விழாவில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு Flurid Gel வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO