வயலில் மாடு மேய்ந்த விவகாரத்தில் மோதல் - கார், டூவீலர் உடைப்பு - திமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்.

வயலில் மாடு மேய்ந்த விவகாரத்தில் மோதல் - கார், டூவீலர் உடைப்பு - திமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது பசு மாடு மேய்ச்சலுக்கு சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த திருவெறும்பூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரனின் அண்ணனான செல்வராஜ் என்பவரது வயலில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து கங்காதரன் பசுவின் உரிமையாளரான முருகேசனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 15 நாட்களாகவே இந்த பிரச்சினை தொடர்ந்த நிலையில் நேற்றிரவு முருகேசன் அவரது மனைவி அன்னலட்சுமி (பாஜக ஆதரவாளர்), இவர்களது மகன் தீபக் மற்றும் அஜித் ஆகிய நான்கு பேரும் வீட்டில் இருந்தபோது திமுக ஒன்றிய செயலாளரான கங்காதரன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டதாகவும், 

அப்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கங்காதரனின் ஆதரவாளர்கள் முருகேசன் வீட்டில் இருந்த கார் மற்றும் இரண்டு டூவீலர்கள், ஜன்னல் கண்ணாடிகளை கற்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு சேதப்படுத்தியதாக முருகேசன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது குறித்து முருகேசனின் உறவினர் கூறுகையில், திமுக திருவரம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளரான கங்காதரன் தனது ஆளுங்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டியதாகவும், 

இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து தனது ஆதரவாளர்களுடன் பயங்கர ஆயுதங்களை வைத்து கார் கண்ணாடிகள் டூவீலர்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாகவும், மேலும் முருகேசன் மற்றும் அவரது மனைவி அன்னலட்சுமி ஆகிய இருவரை நவல்பட்டு காவல் நிலையத்தில் அழைத்து வரவழைக்கப்பட்டு காவல்துறையைக் கொண்டு மிரட்டி காவல்துறையின் ஒரு தலைப்பட்சமாக செயல்படவைப்பதாகவும்,

முருகேசன் தரப்பு புகாரை நவல்பட்டு காவல்துறையினர் ஏற்காமல் பாரபட்சம் காட்டி வருவதாகவும் இதனை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்தில் கொண்டு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். இதனிடையே இரு தரப்பு மோதலில் திமுக ஒன்றிய செயலாளரான கங்காதரனின் அண்ணன் செல்வராஜ் (55) மற்றும் ஆதரவாளர் பார்த்திபன் (23) ஆகிய இருவரும் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision