Play way முறை குழந்தைகள் பள்ளி - புதிய முறை கற்றல்

Play way முறை குழந்தைகள் பள்ளி - புதிய முறை கற்றல்

Play way முறை குழந்தைகள் பள்ளி - புதிய முறை கற்றல் குறித்து விவரிக்கிறார் பள்ளியின் தாளாளர்.... Play we முறை கற்றல் என்பது ஆரம்பகால கல்வியை கற்கும் குழந்தைகளுக்கு கண்களால் பார்த்து, தொட்டு, உணர்ந்து கற்றுக்கொள்ளும் வகையிலான கல்வி முறையாகும். இதில் மஞ்சள் கலர் என்றால் மாம்பழம் வைத்தோ, சூரியனை காட்டியோ அந்த கலரை பயிற்றுவிப்பர்.

இந்த முறையிலான கல்வியை தான் மேரி டிபானி பிளே ஸ்கூலில் கற்று தருகின்றனர். எம்சிஏ பட்டதாரியான புளோரா சாம்சன், இப்படியான ஆரம்ப கல்வி பள்ளியை ஆரம்பித்தது எப்படி கேள்விகளுடன் அணுகினோம்.. குழந்தைகளின் கற்றலில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் ஆரம்பகால கற்றல் முறைகள் தான். அதனை எளிதாக, புரிதலுடன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த பிளே ஸ்கூல் என்று பேச ஆரம்பிக்கிறார்,

எம்சிஏ முடித்துவிட்டு தனியார் கல்வி நிறுவனத்தில் கணினி துறையில் பணிபுரிந்த நேரத்தில் அங்கு சில மாதங்கள் என்னுடைய சுய விருப்பதில் அங்கிருக்கும் மாண்டேசரி பள்ளியில் பிரிகேஜி வகுப்பில் கலந்துகொண்டேன், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பின் எனக்கு குழந்தை பிறந்தது அதனால் ஒரு வருடம் ஒய்வெடுத்து பின்பு ஐந்து குழந்தைகளுடன் 2009ஆம் ஆண்டு க்ரீச் ஆரம்பித்தேன். அது அப்படியே வளர்ந்து 2017ஆம் ஆண்டு எனது சகோதரி பிளே ஸ்கூலாக மாற்றி அதிகாரபூர்வமாக பதிவு செய்தார்.

அதன்பின் தொடர்ந்து நான் இந்த பள்ளியை மேம்படுத்துவதற்காக வெளிநாடு சென்று பணிபுரிந்து நிறைய விஷயங்களை அனுபவமாக்கி கொண்டு இந்தியா திரும்பினேன். தொடர்ந்து பள்ளியை மேம்படுத்தியத்தின் மூலம் தற்போது 75 குழந்தைகளுடன், 5 ஆசிரியர்கள் மற்றும் மூன்று பணியாளர்களுடன் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் நம் பள்ளியில் விளையாடும் குழந்தைகள், பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி என வகுப்புகள் உள்ளது. Play way முறை கற்றலாக இருந்தாலும், எழுத்து முறைக்கும் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். இதனால் இங்கிருந்து ஒன்றாம் வகுப்பிருக்கு செல்லும் குழந்தைகள் அதன்பின்பான கல்வியை கற்று கொள்வதில் சிரமம் படுவதே இல்லை. மேலும் படிப்புடன் கூடவே விளையாட்டு, பாட்டு, டான்ஸ் என அனைத்திருக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

ஒவ்வொரு குழந்தையையும் தனியாக கவனித்து கொள்வதால் பெற்றோர்களும் இதை ஒரு குடும்பமாகவே உணர்கிறார்கள். மேலும் அடுத்த வருடத்தில் இருந்து டிஜிட்டல் வகுப்பறையுடன் மாடர்ன் தொழிற்நுட்ப்பதில் கற்பிக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision