திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்
மகளிர் தின விழாவை முன்னிட்டு,08.03.22 நேற்று சாரநாதன் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு அமைப்பு (Wamen Empowerment Cel) சார்பாக, பேச்சு, ரங்கோலி, பாட்டு, நடனம், மெதுவாக நடக்கும் போட்டி, தாவிச்செல், பாண்டி போன்ற பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இக்கல்வி நிறுவனத்தின் 550 மாணவிகள் ஆர்வத்துடன் இப்போட்டிகளிலில் கலந்து கொண்டனர். 08.03.2022 அன்று மாலை 3.00 மணிக்கு " பாலியல் பாகுபாடுகள் மற்றும்பெண் குழந்தைகளின் மேம்பாடு " என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பேச்சுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஷ்யாமலா நர்சிங் இல்லத்தின் தலைமை மகப்பேறு மருத்துவர் டாக்டர் என்.காயத்திரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தனது உரையில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் ஒரு பெண்ணின் சுயமரியாதையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் காயத்திரி தனது உரையில் வலியுறுத்தினார். முக்கியமாக, நடைமுறை வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அந்த பிரச்சனைகளை கையாள்வதற்கான தீர்வுகள் குறித்து மகப்பேறு மருத்துவர் கவனம் செலுத்தினார். சிறப்புரையில் மொத்தம் 550 மாணவிகள் கலந்து கொண்டனர். மகளிர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியை டாக்டர் சி. வெண்ணிலா வரவேற்றார்.
இயந்திரவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஆர் ரேகா நன்றி கூறினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் அறிவிக்கப்பட்டனர். முதல் பரிசாக ரூபாய் 750 மற்றும் இரண்டாம் பரிசாக ரூபாய் 500 மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டது. அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு கலாசார நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய...