அதிக சுற்று உடைய சட்டமன்றத் தொகுதி எண்ணிய பிறகு முடிவு அறிவிப்பு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

அதிக சுற்று உடைய சட்டமன்றத் தொகுதி எண்ணிய பிறகு முடிவு அறிவிப்பு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அங்கு நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அந்த வாக்கு எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் என ஏராளமானோர் வருகை தர உள்ளனர். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வாக்கு என்னும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் நாடாளுமன்றத் தேர்தல் திருச்சி தொகுதிக்கான சிறப்பு மேற்பார்வையாளர் ராஜு பிரசாத், தேர்தல் மேற்பார்வையாளர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், முகவர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேர்தல் அதிகாரியும் திருச்சி மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார்... திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 

8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி துவங்கப்படும். 8. 15 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்படும். 8.30 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும். தபால் வாக்குகளை எண்ண இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் ஆறு மேஜைகளும் மற்றொரு அறையில் 5 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேஜைக்கு 500 தபால் வாக்குகள் வீதம் எண்ணப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு அறையில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் வாக்கு எண்ணுக் மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் என மூவர் இருப்பார்கள். ஒரு சுற்று முடிவடைந்த பின்பு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மட்டும் பதிவான வாக்குகள் மீண்டும் சரிபார்க்கப்படும் அது சரிபார்த்த பின்பு சுற்றுகளின் முடிவு அறிவிக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரும்போதே, கட்டுப்பாட்டு கருவியில் (சிபியூ) உள்ள, 17c படிவத்துடன் தான் கொண்டு வருவோம். சிபியூ 17c படிவமும், முகவர்களிடம் உள்ள 17 சி படிவமும் ஒப்பிட்டு பார்ப்போம். அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு என்னும் மையத்திற்கு 6 மணிக்கு வரவேண்டும் அவர்கள் வரும்பொழுது எந்தவித மின்சாதன பொருட்கள், மொபைல் போன்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது. பேனா, ஒரு நோட்டு புத்தகம், 17 சி படிவம் இது மூன்றை தவிர்த்து வேறு எதுவு ம் எடுத்து வரக்கூடாது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision