தேசிய அளவிலான விருது பெற்ற திருச்சி மனிதவள மேம்பாட்டு துறை!!
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய மனிதவள மேம்பாட்டு துறை (NHRD) என்பது மனிதவள துறையை மேம்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் இயங்கி வரும் துறையாகும். இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட பெருநகரங்களில் தன்னுடைய பகுதிகளை நிறுவி மனிதவள துறையை மேம்படுத்தும் விஷயங்களை முன்னெடுத்து வருகிறது.
இதில் திருச்சியும் ஒரு பகுதியாக உள்ளது. 2002இல் திருச்சியில் ஆரம்பித்த இந்த இயக்கம், நிறைய மனிதவள மேம்பாட்டு நிபுணர்களுக்காக, மாணவர்களின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த இரண்டு வருடமாக டிவிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிபுணரான விஜிலா ஜாஸ்மின், இப்பகுதியின் தலைவராக இருந்து வரும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகள், முன்னெடுப்புகளை மேற்கொண்டு இவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு பகுதியை தேர்வு செய்து Falcon Trailblazer Award என்ற விருது வழங்கப்படும். இந்த வருடம் இந்த விருது திருச்சிக்கு கிடைத்துள்ளது. 2002இல் திருச்சியில் ஆரம்பித்த இந்த Chapter முதல்முறையாக இந்த விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறும் விஜிலா ஜாஸ்மின்,
இதற்காக உழைத்த அனைவர்க்கும் நன்றியை தெரிவித்ததுடன், இந்த விருது கிடைத்தது பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது, இது மனிதவளம் சார்ந்த பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision