அரசு பேருந்து நடத்துனரை மண்டைய உடைத்த தனியார் பேருந்து ஓட்டுனர்

அரசு பேருந்து நடத்துனரை மண்டைய உடைத்த தனியார் பேருந்து ஓட்டுனர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் கரூர், திருப்பூர், கோவை ஆகிய பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்தந்த ஊர்களுக்கு செல்லது வழக்கம்.

இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற (RBS) தனியார் பேருந்து தில்லைநகர் சாஸ்திரி சாலை கோகினூர் சிக்னல் பகுதியில் வந்து கொண்டிருந்து. அப்போது திருச்சி, மலைக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து கோஹினூர் சிக்னலை கடந்து சென்றபோது கரூர் நோக்கி சென்ற (RBS) தனியார் பேருந்து கோகினூர் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தும் சிக்னலை மதிக்காமல் கடந்து சென்றபோது இரண்டு பேருந்தும் லேசாக உரசி கொண்டன. இதனால் தனியார் பேருந்து ஓட்டுனர் கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த தினகரன் (28) மற்றும் அரசு பேருந்து நடத்துனர் அரியலூர் மாவட்டம் ஆதனூர் தாலுகா செந்தில்வேல் (42) ஆகிய இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.

அப்போது தனியார் பேருந்து ஓட்டுநரை "ஏன் இப்படி வேகமாக இடிப்பது போல் வருகிறாய்" என அரசு பேருந்து நடத்துனர் கேட்டு அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது தனியார் பேருந்து டிரைவர் தனது இருக்கையின் அருகே கிடந்த பேருந்தை கூட்டும் மரக்கட்டையால் அரசு பேருந்து நடத்துனரின் தலையில் அடிக்க, பலத்த தலையில் காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision