வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

25.05.2025 இன்று காலையில் 10.00 மணிக்கு ஸ்டேட் பாங்க் காலனி யில் இருந்து எழுச்சியோடு தொடங்கிய பேரணிக்கு ஜங்ஷன் பகுதி செயலாளர் தோழர் A.அஞ்சுகம் தலைமை தாங்கினார். கோசங்கள் அதிர,100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாநாட்டு ஊர்வலம், மாநாடு நடைபெறும் இடமான ராமச்சந்திரா நகர் MMB காம்ப்ளெக்ஸ்ல் நிறைவடைந்தது..
காலை சுமார் 11.00 மணிக்கு தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டின் கொடியினை மூத்த தோழர்.A.G.பிரான்சிஸ் ஏற்றி வைத்தார்.. மாநாட்டிற்கு தோழர்கள். G.ஈஸ்வரி மற்றும் L.நல்லுசாமி ஆகியோர் தலைமை குழு தோழர்களாக இருந்து செயல்பட்டனர். அஞ்சலி தீர்மானத்தினை தோழர்.மகேஸ்வரி வாசித்தார், CPI ஜங்ஷன் பகுதி துணை செயலாளர் தோழர்.G.R.சரவணன் அனைவரையும் வரவேற்றார்... CPI மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்
M.செல்வராஜ் மாநாட்டை துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார் ..2022 லிருந்து இந்த மூன்று ஆண்டுகளாக ஜங்ஷன் பகுதியில் நடந்த வேலைகள் மற்றும் அரசியல் மற்றும் அமைப்பு நிலை கொண்ட அறிக்கையினை புத்தகமாக தயார் செய்து பகுதி செயலாளர் தோழர்.A.அஞ்சுகம் மாநாட்டில் முன்வைத்தார்..பகுதி செயலாளர் முன்வைத்த அரசியல் அமைப்பு நிலை அறிக்கை மீது விவாதங்கள் கிளை வாரியாக நடத்தப் பட்டது.விவாதங்களுக்கு பகுதி செயலாளர் ஏற்புரை வழங்கினார்...
ஜங்ஷன் பகுதி பொருளாளர் தோழர்.ஜோதி வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார்.. பின்னர் 15 பேர் கொண்ட புதிய பகுதி குழு தேர்வு செய்யப்பட்டுA.அஞ்சுகம் மீண்டும் ஜங்ஷன் பகுதி செயலாளராகவும், தோழர்.G.R.சரவணன் துணைச் செயலாளராகவும், தோழர்.ஜோதி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு தீர்மானங்களை R.முருகேசன் முன்மொழிந்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.பி.பத்மாவதி Ex.MLA அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நிரைவுறை ஆற்றினார்.. நிறைவில் அண்ணா நகர் கிளை செயலாளர் தோழர்.S.ஜனார்த்தனன் நன்றி கூறினார்...
மாநாட்டில் AITUC மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க.சுரேஷ், AIYF மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் M.செல்வகுமார், NFIW மாவட்ட தலைவர் தோழர்.S.பார்வதி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் தோழர்.வை.புஷ்பம், NFIW மேற்கு பகுதி தலைவர் தோழர் K.ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision