இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றிய 3வது மாநாடு இன்று நடைபெற்றது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றிய 3வது மாநாடு இன்று நடைபெற்றது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றிய 3வது மாநாடு இன்று 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கடியா குறிச்சியில் நடைபெற்றது. தோழர்கள் P.சுரேஷ், K. மலர்விழி ஆகியோர் தலைமை குழுவாக இருந்து செயல்பட்டனர்.

இரங்கல் தீர்மானத்தை Sபிரசன்னா வாசித்தார்கள். N.சாந்தகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். கட்சி கொடியினை தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் சிவ.சூரியன் ஏற்றி வைத்தார்கள். மாநாட்டை துவக்கி வைத்து CPI மாவட்ட செயலாளர் எஸ்.சிவா உரையாற்றினார்கள். ஒன்றிய செயலாளர் எம். ஆர்.எஸ். ராஜலிங்கம் மாநாட்டு வேலை அறிக்கையை முன்வைத்து ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 மாநாட்டை வாழ்த்தி மாவட்ட துணைச் செயலாளர் சி. செல்வகுமார், பொருளாளர் சொக்கி . சண்முகம், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம். ஆர்.முருகன், ஒன்றிய பொருளாளர் D.வீரமுத்து உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். 11 பேர் கொண்ட பகுதி குழு தேர்வு செய்யப்பட்டது. அந்த நல்லூர் ஒன்றிய செயலாளராக P.சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளராக S.பிரசன்னா பொருளாளராக, D. வீரமுத்து ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

காவேரி கரையோரம் உள்ள கம்பரசம் பேட்டை, முருங்கைப் பேட்டை, முத்தரச நல்லூர்,பெரிய கருப்பூர், சின்ன கருப்பூர், கொடியாலம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரி, முருங்கைப் பேட்டை பேருந்து நிலையத்தை கால தாமதம் இன்றி உடனடியாக கட்டி முடிக்க கோரி, பெரிய கருப்பூரில் பயனற்று கிடக்கும் பொது கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக் கோரியும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் ஒன்றிய செயலாளர் P. சுரேஷ் நன்றி கூறினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision