கேஸ் சிலிண்டரை பாடை கட்டி சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

கேஸ் சிலிண்டரை பாடை கட்டி சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

இந்தியா முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை தாண்டி விட்டது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்திலிருந்து
மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கேஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டியும், சைக்கிள் பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர்.

அப்பொழுது பேரணி செல்ல காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றம் அருகிலிருந்து பேரணியை துவக்கினர். அதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் பேரணியைத் தொடர்ந்து மெயின்கார்டுகேட் நோக்கி செல்ல முயன்றனர்.

இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதியை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0