குடியரசு தலைவரால் கையெழுத்திடப்பட்ட சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது - திருச்சியில் தொல்.திருமாவளவன் பேச்சு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள ஹெச் எ பி எப் தொழிற்சாலையில் உள்ள எச்எபிஎப் அம்பேத்கர் தொழிலாளர் யூனியன் மற்றும் ஓஎஃப்டி அம்பேத்கர் தொழிலாளி யூனியன் சார்பில் தொழிற்சங்கர்களின் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் செயற்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து தொழிலாளர் விடுதலை முன்னணியின் பேரவை அமைப்பாளர் பேரறிவாளன், திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் பேசிய எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன்.... இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் தமிழாதன் கூறியது போல ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியான அனுபவம்தான் ஓய்வெடுக்க முடியவில்லை. சுற்றுப்பயணம் செய்து ஃபயரிங் எல்லாம் முடித்து வந்துள்ளேன். வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவம். OFT-யில் நுழைந்த பிறகு துப்பாக்கிகள் இயங்குகின்ற விதம், அவர்கள் பயன்படுத்துகிற புல்லட்ஸ், எப்படி தயாரிக்கிறார்கள் விவரங்களை, புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
இரண்டு தொழிற்சாலைகளிலும் என்னுடன் பயணித்த அதிகாரிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டில் தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் அலுவலர்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை தந்தார்கள். அதிகாரிகள் அந்த கோரிக்கைகளுக்கு அமர்ந்து எது செய்ய முடியும் எது செய்ய முடியாது என பொறுப்பாக பதில் தந்தார்கள். 41 தொழிற்சாலைகளும் 7கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றப்பட்டு, ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் சவால்கள், இழப்புகள் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் தெரிவித்தார்கள். கவலை தருவதாகவும் அதிர்ச்சி அடையக் கூடியதாகவும் தகவல்கள் இருந்தது.
இப்ப தேசத்தை பாதுகாப்பதற்கான ராணுவ தளவாடங்களை தயாரிக்கிற தொழிற்சாலையில் நீங்கள் ஆற்றி வருகிற பங்களிப்புணர் அதன் மூலம் அறிவுத்திறன் செயல் திறன் தேசத்துக்கு செய்யப்பட்ட அரும்பணி மெய்சிலிர்க்க வைத்தது. உங்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவு பெரிய அர்ப்பணிப்பு. ஆபத்தான ஒரு கலம் அதில் பொறுப்புடன் பணியாற்றி படைக்களத்திற்கு தயாரிக்க ஒரு தேசப் பணியை செய்து வருகிறீர்கள். அரசியல் சேர்ந்து தான் நாட்டிற்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதல்ல இதுபோன்று அறிவை தேசத்திற்காக அர்ப்பணிப்பது போற்றுதலுக்குறியது. நேரடியாக ஜவான்களாக எல்லையோரம் நின்று நாட்டை காப்பாற்றுவது போற்றுதலுக்குரியது என்றால், துப்பாக்கியை தூக்காமல் நீங்கள் ஆற்றுவது அதற்கு நிகரான பணி. மைக்ரோ மில்லி மீட்டர் அளவு விலை ஏற்பட்டால் கூட துப்பாக்கிகள், ஏவுகணைகள் பயனற்றதாக போய்விடும். நீங்கள் செய்கிற பணி வியப்பை தனியாக போற்றுதலுக்கு உரியது அனைவரும் நெஞ்சார பாராட்டுகிறேன் உங்களது பங்களிப்பை பாராட்டுகிறேன்.
கார்ப்பரேட் மயமாக மாறியதால் மாற்றங்கள் புதிய பணி நியமனம் இல்லை. நூற்றுக்கணக்கான தோழர்கள் அதிகாரிகளாகவும் பணியாளர்களாகவும் இருந்தாலும் ஓய்வு பெற்ற நிலையில் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளது. இறந்தவர்கள் குடும்ப சூழலுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலைகள் தர வேண்டும் அதற்கான எந்த வழிகாட்டுதலும் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி, புதிய ஓய்வு திட்டத்தை கொண்டு வந்தார்கள். அவர்கசேர்த்து பணத்தை செலுத்தி ஓய்வு பெற்ற பின்னர் பெற்று கொள்ளும் கான்ட்ரிபூஷன் பென்ஷன் ஸ்கீம் அது கூடாது என குரல் எழுப்பிய பின்னர் யூனிஃபை பென்ஷன் ஸ்கீம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதுவும் பயனுள்ளதாக இல்லை.புதிய பெயரை தாங்கியுள்ளது அதையும் மாற்ற வேண்டும். பழைய திட்டம் தான் புதிய பயிரை தாங்கி வந்துள்ளது என தெரிவித்தனர். அதனை மாற்ற வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் ஊழியராக வேலைக்கு சேர்ந்து அரசு எடுத்த கொள்கை எடுக்க மாற்றத்தால் உள்ளே போகும்போது அரசு தொழிலாளர்கள் வெளியே வரும்போது கார்ப்பரேட் தொழிலாளர்கள் வரவேண்டிய சூழல். இது பெரிய அநீதி. அரசு அதிகாரியாக பெறுகிற அடிப்படை சலுகைகள் கார்ப்பரேட் தொழிலாளருக்கு கிடையாது. பல்வேறு கோரிக்கைகள் நிர்வாக இயக்குனர் ஒவ்வொரு கோரிக்கையும் படித்து அதற்கான விளக்கங்களை கொடுத்தார். அதிகாரிகள் தொழிலாளர்கள் நலன்களின் அக்கறை உள்ளதாக இருக்கின்றனர் அவர்களை நான் பாராட்டுகிறேன். இன்றைய சந்திப்பு, பயணம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து போராடினால் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. சிதறி கிடந்தால் எதுவும் செய்ய முடியாது. விவசாய சட்டங்கள் வரும்போது அரசியல் கட்சியில் கூட அவ்வளவு பெரிய போராட்டத்தை அகில இந்திய அளவில் முன் எடுக்கவில்லை.
அரசியல் கட்சிகள் விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என அறிக்கை விட்டதோடு சரி களத்தில் ஓர் ஆண்டுக்கு மேலாக பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் புதுடெல்லிக்கு செல்லும் பாதைகள் அனைத்தையும் துண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலத்திற்கான தேர்தல் வந்தது. ஆளும் சக்திகள் திரும்ப பெற்றார்கள் என்ற வரலாறு உண்டு. இந்திய அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு புரட்சி நம்முடைய காலத்தில் நடந்ததிருக்க வாய்ப்பில்லை முன்பு நடந்திருக்கலாம். ஜனநாயக தேசத்தில் ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்து அரசை பணிய வைத்து சாதனை எந்த அரசியல் கட்சியும் அதனை பொறுப்பேற்க முடியாது. மாநிலங்களவை, மக்களவை இரண்டிலும் பெரும்பான்மை இருந்தும் குடியரசுத் தலைவர்கள் கையெழுத்து இடப்பட்ட சட்டங்கள் மக்கள் போராட்டங்களால் திரும்ப பெறப்பட்டன.
கடவுள் எழுதியதாக தீர்ப்பாக இருந்தாலும் இதை திருத்த போராட்டம் துணிச்சல் போர்குணம் தான் முக்கியமானது. குடியரசு தலைவர் கையெழுத்து போட்டால் அவ்வளவுதானா இல்லை மக்கள் இருக்கின்றார்கள்.குடியரசு தலைவருக்கு மேல் மக்கள், உச்ச நீதிமன்றத்திற்கு மேல் மக்கள் எல்லாம் கார்ப்பரேட் ஆகிவிட்டது என்ன செய்ய முடியும் என்ற புலம்பல் தவிர இது கூடாது என்கிற எதிர்ப்பு பெரிதாகி போராட்டம், பெரிதாகி தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இதனை எதிர்ப்பது என்ற நிலைப்பாடு எந்த அளவுக்கு இருந்தது என்று தெரியவில்லை. போராட முடியும் மக்கள் போராட்டமாக மாறினால் அவர்கள் மீண்டும் அவர்கள் மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.
எந்தப் பொது துறையும் தனியார் மயமாக்க கூடாது. கார்ப்பரேட் கையில் கொடுக்கக் கூடாது. இதுதான் நம்முடைய நிலைப்பாடாக இருக்க வேண்டும். வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால் இது அரசாங்க நிறுவனம் அரசாங்கத்தினுடைய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை அரசு நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து அனைத்து கட்டமைப்பும் இருக்கிறது ஆற்றல் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தேவையான படைக்கலன்களை டெண்டர் விட்டு அதில் தனியார் நிறுவனம் பங்கேற்க வேண்டும் அரசு பொதுத்துறை நிறுவனமாக இருக்கின்ற OFT , HAPEயும், பங்கேற்க வேண்டும் என்ற நிலை வருத்தத்துக்குரியது.
இதில் ஆர்டர் எடுத்து உற்பத்தி செய்ய வேண்டும் இந்த பாலிசி எவ்வளவு வேதனைக்குரியது. இதனை இங்கு வந்தது அறிய முடிந்தது. ஏன் ஆடர் இல்லைஅரசு இறக்குமதி செய்யப் போகிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட கூறுகின்றனர். என்ன ஆகும் இந்த பொதுத்துறை நிறுவனம். இது மிகுந்த வலியை தரக்கூடிய கசப்பான உண்மையாக இருக்கிறது. பணியாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அம்பேத்கர் பெயரில் இயங்கக்கூடிய சங்கங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சமூக பிரிவினைக்கு பேர் தான் பகுஜன். பகுஜன் ஒற்றுமை என்பது மிக முக்கியம். நம்முடைய இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும்.
OFTதொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் ஓபிசிக்கான செல் ரூம் வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்தனர். இதை எஸ்சி எஸ்டி அமைப்பினர் கேட்கிறார்கள் என்றால் ஒரு நல்லினத்தை ஏற்படுத்தும். கிரீமீலேகியருக்கு எதிராக பாராளுமன்றத்தில் முதல் குரல் கொடுத்த இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதுவரை கீரிமிலேயருக்கான வருமான வரம்பை கொஞ்சம் உயர்த்த வேண்டுமென மன்மோகன் சிங் பிரதமாக இருந்தபோது மனு கொடுத்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம். MBBS படிக்கின்ற அகில இந்திய இட ஒதுக்கீட்டில் எஸ்சிஎஸ்சி க்கு ரிசர்வேஷன் உள்ளது ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என்பதை கண்டுபிடித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளும், திமுகவினரும் வழக்கு தொடங்கினர். இன்று ஓபிசிவினரும் அதில் படிக்க முடியுது என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முயற்சி.
எஸ்சி, எஸ்டி உடன் சேர்ந்து ஓபிசியின் இணைந்து செயல்பட வேண்டும். சிறுபான்மையின் நல்லிணக்கம் என்பது மிக முக்கியமானது. ஒருவருக்கு, ஒருவர் இணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும், உங்கள் கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் உரத்த குரலாக இருக்கு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும், ஆம் என்ற உறுப்பினருமான பிரபாகரன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், சக்தி ஆற்றலரசு, குருஅன்புச்செல்வன், அம்பேத்கர் தொழிலாளி யூனியன் பொதுச் செயலாளர் ரவி, பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் விஜயபாலு, ஒன்றிய செயலாளர் குணா, சிறுத்தை சதீஷ், உட்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision