அரசு மருத்துவமனை, நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

அரசு மருத்துவமனை, நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் ஊராட்சி, பளூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து, இலால்குடி அரசு மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்து வளாகத்தை தூய்மையாக பராமரித்திட அறிவுறுத்தி, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து நோயாளிகளிடம் கலந்துரையாடி, உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் தரம் ஆகியவற்றை சமையல் செய்யும் கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், இலால்குடி ஊராட்சி ஒன்றியம், நெய்குப்பை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளார்ச்சி திட்டத்தின் கீழ் 25 ஏக்கர் தரிசு நிலம் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு 24 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் எலுமிச்சை கன்றுகள் சாகுபடி தொகுப்பு வழங்கப்பட்டு அதற்கான நுண்ணீர் பாசனம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில், இணை இயக்குனர் (வேளாண்மை) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, இலால்குடி நகராட்சித் தலைவர் துரைமாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா, மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, கலைச்செல்வி,

வட்ட வழங்கல் அலுவலர் மரகதவள்ளி, கூத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.செழியன், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் விவசாயிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn