எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி சார்பில் உயர் கல்வி ஆலோசனை தொழில்வழிகாட்டுதல் நிகழ்ச்சி
எஸ். ஆர். எம் டி.ஆர்.பி பொறியியல் கல்லூரி சார்பாக, திருச்சி மாவட்டத்தின் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 04.08.2023 அன்று தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி கலந்தாய்வு- 2023ற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்வில் வழிபாட்டுப் பாடலுடன், சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிறுவனம் பற்றிய சுருக்கமான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. கணேஷ் பாபு அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகத்தில் உள்ள எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ஆர். சிவக்குமார் அவர்கள் தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் என். மால்முருகன், துணை இயக்குநர் டாக்டர் என். பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அன்றைய சிறப்பு விருந்தினரான ஜெயபிரகாஷ் காந்தி (தொழில் ஆலோசகர் & பகுப்பாய்வாளர்), உயர்கல்வியின் முக்கியத்துவத்தையும், வருங்கால வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் டெக்னாலஜி, சென்சார்கள், செமி கண்டக்டர்கள் போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வாறுமுக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்தும் விளக்கினார். மேலும், வினாத்தாளின் முறை மற்றும் அதை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பது பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார். ஜெர்மன், ஜப்பானியம் போன்ற பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதின் தேவை குறிந்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மீன்வளம், இயற்கை மருத்துவம், பி.காம், வங்கிக்கான Al கருவிகளுடன் கூடிய பொருளாதாரம் பிளாக் செயின் ஆகிய துறைகள் குறித்த அறிமுகத்தையும், ஆலோசனைகளையும் வழங்கினார். உலகம் முழுவதும் நல்ல வாய்ப்புள்ள ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE), NATA, NIFT, UCEED, CLAT மற்றும் CUET போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் ஏன் தேர்ச்சி பெற வேண்டும், சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் அதை எவ்வளவு கவனமாகப் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் கண்காணிப்பு அமைப்பு குறித்து அவர் விழிப்புணர்வு வழங்கினர், மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
எஸ். ஆர். எம் டி.ஆர்.பி பொறியியல் கல்லூரி தொழிற்தொடர்பு இணை இயக்குநர்அவர்கள் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.