திருச்சி காகித ஆலையில் 160 பாம்புகள் பிடிபட்டன

திருச்சி காகித ஆலையில் 160 பாம்புகள் பிடிபட்டன

திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டிபட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை வளாகம் மற்றும் வளாகத்தை சுற்றி ஏராளமான விஷப் பாம்புகள் உள்ளன. இதனை தொடர்ந்து விஷப் பாம்புகளை உயிருடன் மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட ஆலை நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி சென்னை வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்னர் சென்னை வனத்துறை அலுவலகத்தை அனுமதியின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாம்புகளை பிடிக்கும் 12 பேர் காகித ஆலை வளாகத்தில் இருந்த நல்லபாம்பு, கட்டுவிரியன் உட்பட 160 பாம்புகளை உயிருடன் பிடித்தனர்.

பின்னர் காகித ஆலை வளாகத்தில் பிடிக்கப்பட்ட பாம்புகளை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனப்பகுதிக்குள் விட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn