கிராம சபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கிராம சபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று (26.01.2024) திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், புலிவலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்.... கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமே கிராமத்தில் உள்ள வேலைகளின் முன்னேற்றத்தையும், அடுத்த ஆண்டிற்காக திட்டமிட்டுள்ள வேலைகளின் விபரங்களையும் நாம் அறிந்து கொள்வதற்காக நடத்தப்படுகிறது. ஓவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் முக்கியமான பொருட்கள் விவாதிக்கப்படும். அதன் அடிப்படையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவாலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு உயர்க்கல்வித் திட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளின் விபரம் குறித்தும் வரவு செலவு அறிக்கையையும் ஊராட்சி செயலாளர் வாசித்தார்.

 மேலும், இத்திட்டங்களின் மூலம் உங்கள் ஊருக்குத் தேவையான பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் குறித்து, ஊர்ப் பொதுமக்கள் தெரிவிக்கும்பட்சத்தில் வரும் நிதியாண்டில் அத்திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இக்கிராம சபைக் கூட்டத்தில் தொழு நோயாளிகளின் மீதான கருணையையும், சேவையையும் நினைவு கூறும் வகையில் அதற்கான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் சமுதாய முதலீட்டு நிதி ஸ்ரீமாரியம்மன் மகளிர் சுயஉதவிக்குழு, டைமண்ட் மகளிர் சுய உதவிக்குழு, தேன்கூடு மகளிர் சுய உதவிக்குழு, அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஓம்சக்தி மகளிர் சுய உதவிக்குழு ஆகிய 05 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சத்து பத்தாயிரம் வீதம், 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில், முசிறி ஒன்றியக்குழுத்தலைவர் மாலா இராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ராஜன், மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சக்திவேல்,

மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) சோ.உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், அண்ணாதுரை, புலிவலம் ஊராட்சி மன்றத்தலைவர் டி.சுரேஷ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision