குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தென்னிந்திய அளவில் திருச்சியில் மாணவர்கள் தேர்வு!!
2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் தென்னிந்திய அளவிலான தேர்வு முகாம் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் 27.11.2020 முதல் 6.12.2020 வரை சிறப்பாக நடைபெற்றது.
Advertisement
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவு ஆகிய தென்னிந்தியாவில் இருந்து சுமார் 200 மாணவ மாணவிகள் இத்தேர்வு முகாமில் பங்கேற்றனர்.
இத்தேர்வு முகாமின் நிறைவு விழா இன்று திருச்சி தேசியக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சுந்தரராமன், தென் மண்டல நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சாமுவேல் செல்லையா, நேரு யுவகேந்திரா இளையோர் அமைப்பின் தமிழக இயக்குநர் நட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கிருஷ்ணன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
Advertisement
இது குறித்து சிறப்பு விருந்தினர் கிருஷ்ணன் கூறுகையில்...."உலக அளவில் 55 விழுக்காடு இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே என்றும் எதிர்காலத்தில் உலக அரங்கில் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் இந்திய இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பவர் என்றும், இவர்களில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் முக்கிய முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றம், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் "கோவிட் கதா" என்ற விழிப்புணர்வு புத்தகத்தைக் கிராமங்கள் தோறும் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்கள் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள்" என்றும் கூறினார்.
மேலும் அவர் "இந்தியாவில் 41,00,442 நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் உள்ளனர். இவர்களில் 140 பேர் மட்டுமே குடியரசு தினத்தன்று அணிவகுப்பில் பங்கேற்பர் என்றும் இவர்களில் தென்னிந்திய அளவில் 40 பேர் தேசியக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முகாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், மாணவ மாணவிகள் ஊக்கம் பெறும் வண்ணம் உரையாற்றினார்.
Advertisement
இந்நிகழ்வில் தமிழக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் செந்தில் குமார், காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் கண்ணன், கவுகாத்தி மண்டல நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தீபக் குமார் மற்றும் இராஜஸ்தான் மண்டல நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பட்நாகர் ஆகியோர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக வருகை தந்து அணிவகுப்பில் பங்குபெறும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவ மாணவிகளைத் தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியினை தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பிரசன்ன பாலாஜி ஒருங்கிணைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS