திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்லூரிகள் இன்று திறப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் இன்று முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற் கொண்டு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Advertisement
மேலும் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS