BNI கிரிக்கெட் போட்டி - Sponsor நிறுவனங்களின் கண்காட்சி

BNI கிரிக்கெட் போட்டி - Sponsor நிறுவனங்களின் கண்காட்சி

BNI Trichy Tanjore சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஜூலை 19, 20 மற்றும் 21, மூன்று தேதிகளில் திருச்சி அருகே உள்ள எம் ஏ ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பைகள் அறிமுக விழா கடந்த 14ம் தேதி திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டியில் நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் Tittle Sponsor, Co-Sponsor, Power Sponsor வழங்கி உள்ள நிறுவனங்கள் சார்பில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளன. இதில் Tittle Sponsor AMICO Cits Private Limited நிறுவனம் பலவகையாக மாதந்திர சீட்டு, சலுகை விபரம் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. இங்கு வரும் பார்வையாளர்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Co Sponsor வழங்கிய Digi Plus நிறுவனத்தில் வெப் டிசைனிங், ஆன்லைன் புரோமோஷன், வெப் கிரியேட்டிவ் குறித்து எடுத்துரைக்கப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. 

மற்றொரு Co Sponsor வழங்கிய Gia hoildays நிறுவனத்தின் பட்ஜெட் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனத்தில் நம்பிக்கையுடன், மனநிறைவுடன் வெளிநாடு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது.

இதனைத் தொடர்ந்து Power Sponsor வழங்கிய ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் கண் நோய் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் பாதுகாப்பு முறைகள் கண் பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது. இப்போதைக்கு வரக்கூடிய வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

BALARATHNA Civil & Interiors சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில், வீடு கட்டுவதற்கு தேவையான உபகரணங்கள் வடிவமைப்பு தொழில்நுட்பம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது வீடு கட்டுபவர்களின் சந்தேகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்களுக்கு மனநிறைவு ஏற்படும் வகையில் விளக்கம் அளித்து வருகிறது

Power Teck Solution நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள், இயந்திரங்கள், மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் போன்றவைகள் தரமானதாகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

Vizen Fire and Safty நிறுவனத்தினர் அமைத்துள்ள stall- ல் கட்டுமான நிறுவனங்களில் வைக்கப்பட வேண்டிய தீ தடுப்பு உபகரணங்கள், வழிமுறைகள், செயல்முறை விளக்கம் ஆகியவை செய்து காட்டப்படுகிறது. 

Suve Graphics நிறுவனத்தினர் செய்து வரும் ப்ளக்ஸ் டிசைன் காலண்டர் வடிவமைப்பு அழைப்பிதழ் வடிவமைப்பு போன்ற பல்வேறு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன பல வண்ணங்களில் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் இங்கு வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படுகிறது.

Tata aia Insurance நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள Stallz- ல் காப்பீடு திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது ஒவ்வொரு காப்பீடு திட்டத்தின் வகைகள் அவற்றின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது

குறிப்பாக இந்த கிரிக்கெட் போட்டியில் இடைவெளியில் BNI உறுப்பினர்கள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் இயக்குனர்கள் கலந்து கொள்ளும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது இதில் ஒவ்வொருவருடைய நிறுவனங்களின் அறிமுகம் தொழில் ஒத்துழைப்பு தங்களுடைய நிறுவனங்களை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision