ரூபாய் 26 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்.
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் 97 பயனாளிகளுக்கு ரூபாய் 26 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இவ்விழாவில், துறையூர் பகுதியில் தீ விபத்தினால் கடைகளை இழந்த 20 பயனாளிகளுக்கு 20 ஆயிரம் வீதம் ரூபாய் 4 இலட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகையும், வேளாண்மை துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 14,800 மதிப்பீட்டில் பண்ணை கருவிகளும், மண்புழு உர படுக்கைகளும், துவரை மற்றும் வேளாண் இடு பொருட்களும், நெல் நுண்ணூட்ட உரங்களும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 4.11 இலட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளும்,
வருவாய்த்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூபாய் 16 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூபாய் 35 ஆயிரத்து 635 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு மானியத்தொகைக்கான ஆணையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ரூபாய் 35 ஆயிரத்து 635 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களும், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பீட்டில் உதவித் தொகைக்கான ஆணையும்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூபாய் 1 இலசத்து 16 ஆயிரத்து 744 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களும் என மொத்தம் ரூபாய் 26 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் 97 பயனாளிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தவச்செல்வம், மாவட்ட ஊராட்சிதலைவர் இராஜேந்திரன், நகராட்சி ஆணையர், நகராட்சி பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision