சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 100 ! விரைவில் விலை விண்ணை எட்டும் !!
தமிழகத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சின்ன வெங்காயம் கிலோ 60 முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது. விலை உயர்வால் சின்ன வெங்காயத்தைத் தவிர்த்த குடும்பத்தலைவிகள், பெரிய வெங்காயத்தை அதிகளவு வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். செப்டம்பர் மாதத்தில் சின்ன வெங்காயம் விலை கிலோ 45 முதல் 50 ரூபாயாக சரிந்தது. அதேநேரத்தில், விலை உயர்வு அச்சமும் சந்தையில் தொடர்ந்தது.
புரட்டாசி முடிவுரும் காலமாக இருப்பதால் கடந்த வாரத்தில் இருந்து சின்ன வெங் காயத்தின் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. இந்நிலையில், தமிழகத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகெங்கை, அரியலுார் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் அளவு பெரும் அளவு குறைந்து விட்டது. நேற்று காலை திண்டுக்கல் மொத்த வெங்காய சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை எட்டியது.
சில்லறை விற்பனையில், வெங்காயத்தை இந்த விலையில் விற்பளை செய்ய முடியாது என்ற பீதியால், சிறு வியாபாரிகள் வெங்காயம் ஏலத்தைத் தவிர்த்து வந்தனர். குடும்பத்தலைவிகளும் சின்ன வெங்காயத்தை வாங்குவதைத் தவிர்த்து, கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகும் பெரிய வெங்காயத்தை மீண்டும் இதனால், செப்டம்பர் முதல் வாங்கத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் தீபாவளி பண்டிகை சீசனில் சின்ன வெங்காயத்தின் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கும் என்ற நிலையில், பண்டிகை காலத்தேவைக்காக சொற்ப அளவில் வெங்காயத்தை வாங்கவுள்ளதாக, திண்டுக்கல் சந்தைக்கு வந்த குடும்பத்தலைவிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங் களில் ஜூன், ஜூலை மாதங்களில் வெங்காய சாகுபடி மானா வாரியாக நடக்கும். ஆனால், இந்த ஆண்டில் போதிய அளவு மழையில்லாத நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், வெங்காய சாகுபடியை கைவிட்டனர். தேவையில்லாமல், பணத்தை விவசாயத்தில் முதலீடுயும். செய்து, ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால், சாகுபடி இல்லாத நிலையில், இயல்பாகவே சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துவிட்டது.
ஏற்கனவே, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெங்காயத்தை சாகுபடி செய்து, சேமித்து வைத்திருந்த விவசாயிகள், இப்போது மெல்ல மெல்ல தங்கள் இருப்பை வெளியில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். சந்தைக்கு வரத்து குறைவு. ஆனால், தேவை அதிகம். இதனால், இயல்பாகவே விலை உயர்ந்துவிட்டது.
தீபாவளி நாட்களில் சின்ன வெங்காயம் கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்கும் என்று எதிர்பார்க்கிறோம். பிற மாநிலங்களில் இருந்து வெங்காயம் ஓரளவு வரத்தொடங்கினால், விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.