ஆயிரம் ஏக்கர் கொண்ட விவசாயி அமைச்சர் திருச்சியில் எம் ஆர் கே பேச்சு

ஆயிரம் ஏக்கர் கொண்ட விவசாயி அமைச்சர் திருச்சியில் எம் ஆர் கே பேச்சு

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் திருச்சியில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் திட்டம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  பேசிய தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் .ஆர்.கே .பன்னீர்செல்வம்....  5990 கோடி ரூபாய் நிதி உதவியுடன் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கு பிறகு மூன்று சதவீதம் வட்டியில் மானியத்துடன் கடன் உதவி வழங்குவதாக குறிப்பிட்டார். எந்தத் திட்டத்தையும் 10 ஆண்டுகளில் செய்யாமல் தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும் கட்சியை காப்பாற்றுவதற்கும் கல்லாப்பெட்டி சிங்காரம்  இபிஎஸ் என தெரிவித்தார். இங்கே அரசியல் பேசக்கூடாது தொடர்ந்து நாகரீகமற்ற அறிக்கைகளை (இபிஎஸ்) வெளியிடுகிறார் ஆகவே பேச வேண்டியதாயிற்று.

தரமான நெல் விதைகளை பயன்படுத்த அதிக லாபம் தருமளவிற்க்கு உற்பத்தி செய்ய வேளாண்துற திட்டமிட்டுள்ளது. தரமான விதையை ஒர் இரு மாதத்தில் முடியாது. நான்காண்டு காலத்திற்க்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. இதற்கு முன்பாக தவறவிட்டவர்கள் அவர்கள் ஆட்சியில்  புதிய ரகங்களை கண்டுபிடிக்க தவறிவிட்டனர்.

மக்களுக்கு லாபம் தரும் நெல், கரும்பு விதைகளை நோய்கள் தாக்காமல் உள்ளவற்றை கண்டுபிடிக்காமல் தவற விட்டார்கள் அவர்கள் தவறவிட்டது உடனே செய்ய முடியாது அதற்கு கொஞ்ச காலமாகும் என வேளாண்துறை அமைச்சர் பேசினார்

3 லட்சத்து  50 ஆயிரம் ஏக்கர் குறுவை நெல்லை கடந்து ஆண்டு உற்பத்தி செய்துள்ளோம் .இந்த ஆண்டு 5லட்சத்து 90ஏக்கரில் கூடுதலாக குறுவை பயரரிட்டுள்ளோம். விதைகள், உரங்களை தயாராக வைத்துள்ளோம். அறிக்கையில் அரசு தூங்குகிறது என்கிறார்கள். தூங்காமல் செயல்படுவது திமுக அரசு . அதிமுக ஆட்சியில் எந்த நிகழ்ச்சியும் கிடையாது.  அதிமுக தலைவர் என்று சொல்லக்கூடியவர் நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடியவர். முதல் நாள் முதலமைச்சர்  அடுத்த நாள் மற்றவர்களை தூக்கியெறிய கூடியவரை முதலமைச்சர் ஆக்கி இருக்கிறார்கள். மக்களுக்கு பணி செய்யக்கூடிய அரசை குறை சொல்வது நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் எங்கேயும்  விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பை கொடுத்ததில்லை. கடந்த ஆட்சியில் நாள்தோறும் மாதம் தோறும் போராட்டம் சாலையிலேயே அனைவரும் போராடிக் கொண்டே இருந்தனர்.

 உரக்கடைகளில் நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்து 20% உரங்களை கூட்டுறவு கடைகள் மூலமாக கொடுக்கிறோம். மீதம் 70% உரங்களை உரக்கடை மூலமாக விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3700  உரக்கடைகளில்  ஆய்வு செய்து அதில் 125 உரக்கடைகள் மூடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். 100 ஏக்கர் வைத்து விவசாயம் செய்பவர் பெரிய விவசாயி நேரு. விவசாயிகளின் வலியை உணர்ந்தவர். அதற்கு மேடையில் இருந்த அமைச்சர் நேரு விஜிலென்ஸில் போய் சொல்லு என நகைப்புடன் குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO