திருச்சியைச் சேர்ந்த பெண் காவலர் தற்கொலை

திருச்சியைச் சேர்ந்த பெண் காவலர் தற்கொலை

திருச்சி உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது மகள் கவிப்பிரியா(27). இவர், நாகை ஆயுதப்படையில் எழுத்தராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் கவிப்பிரியா, வழக்கம் போல் சாப்பிடுவதற்காக தான் தங்கி இருந்த காவல் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக காவலர்கள், கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

தொடர்ந்து அழைத்தும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள், அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அப்போது அவர் தங்கி இருந்த அறையின் கதவு உள் பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது கவிப்பிரியா, துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அங்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன?

பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என பல வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டகவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvisionn