விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தமிழ்நாடு அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளில் 23 விடுதிகள் மாணவருக்கும் 14 விடுதிகள் மாணவியருக்கும் ஆக மொத்தம் 37 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ/மாணவியர்கள் சேர தகுதியுடைவர்கள் ஆவர்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
• அனைத்து விடுதி மாணவ/மாணவியர்களுக்கு உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்
• 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்/மாணவியருக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும்.
• 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்/மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் :
• பெற்றோர்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
• இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானமையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (23.06.2023)-க்குள்ளும் சமர்பிக்க வேண்டும். மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டுமே இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள்ளி மாணவ/மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn