படிக்கும் வயதில் மாணவ, மாணவிகள் காதலிக்க வேண்டாம் - திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் நடிகர் செளந்தர்ராஜா பேச்சு
திருச்சி மாவட்டம், சமயபுரம் இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் இதர கல்வி நிறுவனங்கள் இணைந்து உலக இருதய தினத்தினை முன்னிட்டு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் என 600 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தினை திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான சௌந்தர்ராஜா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மருத்துவக்கல்லூரி ஈஸ்வரி அரங்க வளாகத்தில் துவங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், கல்லூரி வளாகத்தில் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் அரங்க வளாகத்தில் முடிவடைந்தது. பின்னர் கல்லூரி வளாகத்தில் நடிகர் சௌந்தரராஜா மரக்கன்றுகளை நட்டார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது... மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் இறந்தாலும், அவர் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் நட்டு வைத்த கோடிக்கணக்கான மரக்கன்றுகள் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அவரது இடத்தினை தக்க வைக்க யாராலும் முடியாது. இன்றைய நவீன தொழில்நுட்பத்தினால் தற்போதுள்ள மாணவ மாணவிகள் அனைத்தையும் தெரிந்துக் கொள்கின்னர்.
படிக்கும் காலத்தில் மாணவ, மாணவிகள் காதலிக்க வேண்டாம். அந்த வயதில் நீங்கள் உங்கள் வாழ்க்கையினை தீர்மானிக்க முடியாத வயது ஆகும். எனவே மாணவ, மாணவிகள் 23 வயதிற்கு பிறகு காதலிக்க ஆரம்பிங்க 25 வயதிற்கு பிறகு திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் என்றார்.
எஸ்ஆர்எம் கல்விக்குழு திருச்சி மற்றும் ராமாபுரம் தலைவர் டாக்டர் சிவக்குமார் மற்றும் திருச்சி எஸ்ஆர்எம் ஐஎஸ்டி தலைவர் நிரஞ்சன் ஆகியோர் வாழ்த்துதலுடன் நடைபெற்ற இவ்விழாவில் செயல் இயக்குநர் டாக்டர் ரகுபதி, இணை இயக்குநர் டார்கர் என். பாலசுப்ரமணியன், மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn