500 கிலோ மெகா சைஸ் மாலை அரண்டு போன அமைச்சர் 

500 கிலோ மெகா சைஸ் மாலை அரண்டு போன அமைச்சர் 

திருச்சியில் தி.மு.க.,வினர் மெகா சைஸ் மாலை தயாரித்து, அதை கிரேனில் துாக்கி வந்து, விருது வழங்கும் விழாவுக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு அணிவிக்க கொண்டு வந்தனர். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரவேற்க பேனர்கள், கட்-அவுட்கள் போன்ற ஆடம்பரம் இருக்கக்கூடாது என்று கட்சியினருக்கும், அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். 

அந்த உத்தரவை காற்றில் பறக்க விடும் வகையில், திருச்சியில் சம்பவம் நடைபெற இருந்தது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். விழாவுக்கு வந்த அமைச்சர் நேருவை வரவேற்க, அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், ஒரு லட்சம் ரூபாய் செலவில், 500 கிலோ விச்சி பூவை கொண்டு ஸ்ரீரங்கம் பூ சந்தையிலுள்ள அணில் மாதவன் உடன் 20 பேர் சேர்ந்து 24 மணி நேரத்தில் மெகா சைஸ் மாலையாக்கி  உள்ளனர்.

கயிறு மூலம் கருப்பு கலரையுப் சிவப்பில் விச்சி பூ வைத்து மெகா சைஸ் மாலை தயாரித்தனர். அதை ஆட்களால் தூக்க முடியாது என்பதால், கிரேன் மூலம், மாலையை தூக்கி நிறுத்தி இருந்தனர். விழாவுக்கு வந்த அமைச்சர் மாலையைப் பார்த்து அரண்டு போனார். ‘முதல்வர் இது போல் செய்யக்கூடாது என்றும் எளிமையாகவும் இருக்க சொல்லி உள்ளார்.

அதனால், இதெல்லாம் வேண்டாம்,’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டாராம். இதனால், மெகா சைஸ் மாலை போட்டு, அமைச்சரை வரவேற்க நினைத்த, விழா ஏற்பட்டாளர் ஆசிரியர் மதனா உள்ளிட்ட பலரும் அப்செட் ஆகினர். அமைச்சர் ஏற்கவில்லை என்பதால், அந்த மாலை, கிரேனில் தொங்க விட்டபடி, சில மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.

இதுவரை தமிழகத்தில் யாரும் இவ்வளவு பெரிய மாலை தயாரித்ததில்லை என பூ வியாபாரி தெரிவித்தார். இந்த மாலையை போடுவதற்கு ஒரு கிரைன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசியில் மாலை யாருக்கும் பயன்பாடு இல்லாமல் தரையில் ஓரமாக மாலையை போட்டு விட்டு கிரைன் புறப்பட்டு சென்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn