பழிக்குப்பழி வாங்கும் நிகழ்வை தடுத்த காவல் ஆணையர் - 2 பேரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து மேற்கொண்டு கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக போக்கிரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (26.09.2021) காலை 10 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் மணல்மேடு அருகில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த தட்சிணாமூர்த்தி (20) மற்றும் சுரேஷ் (33) ஆகிய இருவரை சோதனை செய்ததில் வெட்டுவாள் -1 மற்றும் அருவாள்-1 ஆகியவை வைத்திருந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த தனிப்படையினர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரண்டு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கடந்த 26.10.2020ஆம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்மேடு மேல விபூதி பிரகாரம், திருவானைக்காவல் என்ற இடத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் புலன் விசாரணையில் மேற்படி வழக்கின் சட்ட பிரிவுகள் சம்பந்தப்பட்ட எதிரிகளை இறந்துபோன முருகன் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து பழிதீர்க்கும் நோக்கத்தோடு அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தனர். பின்னர் அதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு மேற்படி எதிரிகள் தட்சணாமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காவல்துறையினரின் விரைந்து செயல்பட்டால் பழிக்குப்பழி வாங்கும் நிகழ்வு நடைபெற இருந்த கொலை சம்பவம் உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது கொலை சம்பவத்தை அடுத்து அவர் வைத்திருந்த ஆயுதங்களை பதிவு செய்து தனிப்படை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
இனிவரும் காலங்களில் இது போன்று பழிவாங்கும் எண்ணத்துடன் சட்டத்துக்குப் புறம்பாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn