திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோ ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் 2021ம் ஆண்டு 30% தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார். கடந்த தீபாவளி 2020ல் பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் 738.50 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி 2021க்கு 2000 லட்சம் விற்பனை இலக்கு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் 2020ல் 174.26 லட்சம். நடப்பு ஆண்டிற்க்கு (2021) 350 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் என ஆட்சியர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்... தற்போது வரை 42 பேர் டெங்கு பாதிப்பால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முக்கியமாக தூய நீர் தேங்க கூடிய இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பணியாளர்கள் 3 முறைகளாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூய தண்ணீர் தேங்கும் வீடு, கட்டிடங்கள் மற்றும் காலி மனைகளில் மழைநீரரை தேங்கி வைப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதம் விதிப்பது என்பது நோக்கமல்ல. டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு தொடர்ந்து மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோரனாவை அடுத்த அலை வராமலிருக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி 70% தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் தற்போது திருச்சியில் 64 சதவீதம் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் 73% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். புறநகர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றார்.
மேலும் பொதுமக்களிடையேகோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைவதால் மக்களிடையே தனிமனித இடைவெளி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர். அவ்வாறு இருக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.