அதிகரிக்கும் கொரோனா 800 படுக்கைகள் 2 சிகிச்சை மையங்கள்

அதிகரிக்கும் கொரோனா 800 படுக்கைகள் 2 சிகிச்சை மையங்கள்

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 187 ஆகவும், பாதிப்பு 16,430 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்பொழுது 855 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால், திருச்சியில் மீண்டும் இரண்டு இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது தலா 400 படுக்கைகள் என இரண்டு இடங்களிலும் 800 படுக்கைகள் தயாராக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மேற்கண்ட இரண்டு இடங்களிலும், 65 வயதுக்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr