AITUC-ல் இணைந்த மாற்று சங்க ஆட்டோ ஓட்டுநர்கள்

AITUC-ல் இணைந்த மாற்று சங்க ஆட்டோ ஓட்டுநர்கள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் கல்பனா ஆட்டோ ஓட்டுநர்கள் மாற்று சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 30 பேர் AITUC ல் இணைந்தனர். மாற்று சங்கத்தை சார்ந்த 30 பேர் தோழர். அப்பாஸ் தலைமையில் AITUC மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் முன்னிலையில் AlTUC ஆட்டோ சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவராக K.ரகு, துணைத் தலைவர்களாக I. அபுதாஹீர், N.கணேசமூர்த்தி, A அப்துல் ஜலீல் ஆகியோரும், செயலாளராக A.அப்துல் ஷரீஃப், துணைச்செயலாளர்களாக M.ஞானராஜ், தாயுமானவன், ராஜசேகர், பொருளாளராக N.மாரியப்பன் ஆகியோரும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  AITUC மாவட்ட பொதுச்செயலாளர் க.சுரேஷ், AITUC ன் வரலாறு பற்றியும் சங்கத்தில் இணைந்த தோழர்களை வாழ்த்தியும், சால்வை அணிவித்தும் உரையாற்றினார்கள்.

 AITUC சங்கத்தில் இணைந்த தோழர்களையும், புதிய நிர்வாகிகளையும் வாழ்த்தி சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ். சிவா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆர். முருகேசன், ஏ.அப்பாஸ்,அப்துல் ஷரீஃப் பாலு, சௌந்தர்ராஜன், சையது முஸ்தபா, ராமச்சந்திரன், சரவணன் முஸ்தபா, சையது அபுதாஹிர், ரஹமத்துல்லா, மணிகண்டன் காளியப்பன், அல்லாஹ் பிச்சை, செந்தில்குமார், ராஜசேகர் உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision