ஆட்சியர் அலுவலகத்தில் தாய் சேய் நல உதவி மையம்

ஆட்சியர் அலுவலகத்தில் தாய் சேய் நல உதவி மையம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் சேய் நலனை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் 'தாய் சேய் நலம் உதவி மற்றும் கண்காணிப்பு மையம்" தொடங்கப்பட்டு உள்ளது. இம்மையத்தின் வாயிலாக கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கும் குறிப்பாக சிக்கல் உள்ள கர்ப்பிணிகளுக்கும் தேவையான ஆலோசனைகள் மற்றும் தொடர் பராமரிப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக 24X7 மணி நேரமும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள் 9952611108, 7530015292 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகப்பேறு அலுவலர்களும் தங்களிடம் பராமரிப்பு மற்றும் சிகிச்சை பெற்று வரும் சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள், RCHID தேவைப்படும் கர்ப்பிணிகள் குறித்த விபரங்களை மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும், mchhrhelpdesktry@gmail.com என்ற மின்னஞ்சல்  வாயிலாக  உடனடி தகவல் தெரிவிக்கவும் அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision