தூய்மை பணியாளர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

தூய்மை பணியாளர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்  உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான மாண்புமிகு நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அமைப்பின் நிறுவனர் & தலைவர் ஆர். கே. குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச். சுப்பிரமணியம் ஆகியோரின் அறிவுரையின்படியும் திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராமத்தில்  தூய்மை பணியாளர்களாக  பணிபுரிந்து வரும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு அவர்களுடைய சேவையை பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு  நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

   உலக பெண்கள் தினத்தில் பெண்கள் வரலாற்றில் அவர்கள்  சாதனைகளை படைக்க அவர்கள் கடந்து வந்த கடினமான பாதைகள் என்றும் நினைவு கூற தக்கது காலம் காலமாக பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அவர்கள் சாதிக்க அவர்களுக்கு அளிக்க பட வேண்டிய வாய்ப்புகள் அவர்களுக்கு குடும்பத்தில் சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய மரியாதை உள்ளிட்ட அனைத்தும் அவர்களுக்கு எளிதாக கிடைத்ததில்லை  ஒவ்வொரு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை அவர்கள் சந்தித்து போராடி பெற வேண்டிய நிலை தான் அன்று முதல் இன்று வரை உள்ளது அப்படி பல போராட்டங்களை  குடும்பத்திலும் இந்த சமுதாயத்திலும் சந்தித்து  அதை கடந்து இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்றனர் ஆண்கள் மட்டுமே சாதித்து வந்த துறைகளில் இப்போது பெண்களும் சாதித்து வருகின்றனர் உதாரணமாக விமானிகளாக  ரயில் ஓட்டுநர்களாக பேருந்து ஓட்டுநர்களாக விஞ்ஞானிகளாக விளையாட்டு வீராங்கனைகளாக  காவல்துறை அதிகாரிகளாக  மருத்துவர்களாக மாவட்ட ஆட்சியர்களாக அரசியல் தலைவர்களாக தொழிலதிபர்களாக இப்படி பல்வேறு துறைகளிலும் இப்போது பெண்களும் சிறப்பாக பணியாற்றியும் தங்களது பங்களிப்பை வழங்கியும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர் இப்படி பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களுக்கு அவர்களுடைய  சாதனைகளை பாராட்டி போற்றுவதுடன் மேலும் பல வாய்ப்புகள் வழங்குவதும்  குடும்பம் சமூகம் மற்றும் நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் இன்று  பணிக்கு செல்லும் பெண்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு பணிக்கும் செல்லுகின்றனர் இதுவே பெரிய சாதனை ஆகும் இப்படி பல சாதனைகளை புரிந்து வரும்  பெண்களுக்கும் இனிய உலக பெண்கள் தின வாழ்த்துக்களை  அமைப்பின் சார்பில் தெரிவித்து கொள்ளப்பட்டது இந்த  உலக பெண்கள் தினத்தில் திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்ததில்  தினந்தோறும் வீடுகள் மற்றும் தெருக்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி  வீடுகளில் தேங்கும் குப்பைகளை  தினமும் வந்து பெற்று கொள்வதுடன்  தெருக்களையும் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் சாலை தெருக்கள் சுத்தமாக இருக்கவும் சுற்றுச்சூழல் மாசு படாமல்  பாதிக்கபடாமல் இருக்கவும்  சிறப்பாக பணியாற்றி வருகின்ற 11 பெண் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள்  அமைப்பின் பொதுச்செயலாளரும் Bhel தேசிய  தொழிற்சங்க தலைவருமான வே.நடராஜா அவர்கள்  தலைமைதாங்கி  நிகழ்வினை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் மகளிர் பிரவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணைச்சொயலாளர் அல்லி கொடி  அமைப்பின் நிர்வாகிகள் சித்ரா மூர்த்தி ஆனந்தி சொளந்தரம் சிபு நிவரஞ்சனி  விளையாட்டு பிரிவு இணைச் செயலாளரும் குத்துச்சண்டை பயிற்ச்சியாளருமான எம். எழில் மணி உலக சாதனையாளர் தர்னிகா வெங்கடேஷ் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை  அமைப்பின் பொதுச்செயலாளரும் திருச்சி மாவட்ட தலைவருமான Er.செந்தில் குமார் மகளிர் பிரிவு இணைச் செயலர் அல்லி கொடி அமைப்பின் விளையாட்டு பிரிவு இணை செயலாளரும் குத்துச்சண்டை பயிற்ச்சியாளருமான எம்.எழில்மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் மரகன்றுகள் வழங்கப்பட்டது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn