பள்ளி அளவிலான ஆங்கில பேச்சுப்பயிற்சி புத்தகங்கள் வழங்கும் விழா

பள்ளி அளவிலான ஆங்கில  பேச்சுப்பயிற்சி புத்தகங்கள் வழங்கும் விழா
திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேச உதவக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆங்கில பேச்சுப்பயிற்சி புத்தகங்கள் (Spoken English Books) பள்ளியால் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு அவை ஒப்படைக்கப்பட்டன.  

ஆங்கில பேச்சுப்பயிற்சி புத்தகத்தின் முதல் பிரதியை  Dr. திருப்பதி வெளியிட, திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர்கள் அ.ஜோசப் அந்தோணி, ப.அர்ஜூன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். திருப்பதி தமது உரையில், இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம், அது அரசுப்பள்ளிகளிலே தரமான முறையில் இந்த பள்ளியில் கற்பிக்கப்படுவது  மிகவும் பாரட்டுக்குரியது. 

இந்த புத்தகம் வெளியிட முயற்சி மேற்கொண்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டுக்கள். என்னுடன் இணைந்து Dr. பாலசுப்ரமணியன்,  Dr. சொக்கலிங்கம், முயற்சி மேற்கொண்டு இன்று இப்புத்தகத்தை  மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொடுத்துள்ளோம்.  உறுதியாக தினசரி இப்புத்தகத்தில் உள்ள ஆங்கில பேச்சுப்பயிற்சிகளை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது அவர்களுக்கு நாளடைவில் ஆங்கிலத்தின் மீதுள்ள பயம் போய், சிறப்பாக ஆங்கிலம் பேச முடியும். 

அரசு பள்ளிகள் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சிறப்பாக முன்னேறி வருகிறது. குறிப்பாக புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. பள்ளியில் படிக்கும் 200 மாணவர்களுக்கும் ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி தலைமையாசிரியை ப. அம்சவல்லி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் குழுமாயி, கார்த்திக், ஆசிரியர்கள் அனிதா ராணி, மீனாட்சி,  சுசீலா, கிறிஸ்டினால் லூமி, டாரத்தி, கவிதா, ஸ்டெல்லா, முருகேஷ்வரி உட்பட திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பேபி டெல்பின் மேரி நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn