மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் ஒன்று கூடும் நிகழ்ச்சி

மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் ஒன்று கூடும் நிகழ்ச்சி

மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பாக தொட்டியம், முசிறி பகுதிகளில் உள்ள HIV அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இலக்கு மக்களை கண்டறிந்து இலக்கு மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி தொட்டியம் யூனியன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கு தொட்டியம் அரசு மருத்துவமனை STI மருத்துவர் மரு . வினோத் மற்றும் ICTC ஆலோசகர் புஷ்பவள்ளி ஆய்வக தொழில்நுட்புனர் கமலக்கண்ணன், சமூக ஆர்வலர் லாவண்யா, TB களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் மக்கள் மேம்பாட்டு வினையகத்தின் திட்ட அலுவலர் அ. முத்துக்குமார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சி மக்கள் மேம்பாட்டு வினையகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision