உங்க ஏரியால பாதாள குழிகள் உள்ளதா? உடனே திருச்சி விஷனுக்கு தெரிவியுங்கள்

உங்க ஏரியால பாதாள குழிகள் உள்ளதா? உடனே திருச்சி விஷனுக்கு தெரிவியுங்கள்

திருச்சி மாநகராட்சி பகுதிகள் முழுவதும் பாதாள சாக்கடைகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இப்பணிகள் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. பாதாளை சாக்கடைக்கு பறிக்கும் குழிகள் மூடாமலும் மேலும் மழை நீர்வடிகால் பகுதிகளில் கான்கிரீட் வாய்க்கால்கள் அமைத்து அதில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கும் காட்சிகளையும் காண முடிகிறது .

மழை பெய்து இவைகளில் நீர் நிரம்பும் பொழுது பள்ளங்களும் அதில் உள்ள கம்பிகளும் தெரியாமல் பொதுமக்கள் ஏராளமானோர் குழிகளில் விழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதில் சிக்கி தவிப்பதும் நிகழ்கிறது. பொதுமக்கள் யாரும் இதில் விழுந்து படுகாயம் அடைந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க

திருச்சி விஷன் மாநகராட்சிக்கும் பொதுமக்களுக்கு பாலமாக இணைந்து இப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு மூடாத குழிகளையும் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத காட்சிகளையும் மாநகராட்சிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்துள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பாதாள குழிகள் மற்றும் பாதியிலேயே நிற்கும் மழை நீர் வடிகால் வேலைகள் அதனால் பாதிப்படையும் அப்பகுதிகள் மக்கள் குறித்த காட்சிகளைப் புகைப்படங்களாக வார்டு நம்பர், தெரு பெயர் விபரத்துடன் எங்களுக்கு 9787283349 என்றஎண்ணிற்கு வாட்ஸ் ஆப்  அனுப்பினால் மாநகராட்சி உடனடியாக அதற்கு துரித நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும். மக்களுக்கு ஏற்படும் சிரமங்களிலிருந்து தீர்வு காண  இம்முயற்சி திருச்சி விஷன் மேற்கொள்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO