திருச்சி கலெக்டர் அலுவலக ரோட்டில் முன் அனுமதி பெறாமல் வெட்டப்பட்ட மரம்

திருச்சி கலெக்டர் அலுவலக ரோட்டில் முன் அனுமதி பெறாமல் வெட்டப்பட்ட மரம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் ரோட்டில் உள்ள தாட்கோ அரசு அலுவலகம் அருகில் பர்மா காலனி பகுதியில் "TASTY 30" என்ற பெயரில் கடை வைத்துள்ள கடைகார் கடை அருகில் இருந்த மரத்தை தனது கடைக்கு இடையூறு ‌ என்று கூறி  இன்று காலை அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியுள்ளார்.

இத்தனைக்கும் இவர் கடையே "பாதசாரிகள் நடக்கும்" பிளாட் பாரத்திற்கு மேல் ஆக்கிரமித்து தகர கொட்டகை அமைத்து ஷோ கேஷ் வைத்து தான் வியாபாரம் செய்வது குறிப்பிடதக்கது. இந்த கடையின் உரிமையாளர் தான் இன்று [10.07.2022] ந் தேதி காலை 11.30 மணிக்கு மேற்படி இவரது கடைக்கு முன்பாக

சாலையோரத்தில் அரசாங்க உதவியால் நடப்பட்ட மரத்தினை எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வெட்டியுள்ளார். இவ்வாறாக ஒவ்வொரு தனி நபர்களும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரங்களை வெட்ட நினைத்தால் திருச்சியில் ஒரு மரம் கூட இருக்காது.

எனவே திருச்சி மாவட்டத்திற்கு செந்தூர் உள்ளிட்ட புதிய ரக மரங்களை நட்டு இயற்கையை வளர்க்க நினைக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், ஆக்கபூர்வமான பணிகளில் தன்னை உள்ளன்போடு அற்பணித்து செயல்படும்

திருச்சி மாநகர ஆணையர் அவர்களும் இது போன்று சாலையோரம் அரசால் நடப்படும் மரங்களை எவ்வித முன்அனுமதியும் பெறாமல் வெட்டப்படுவதை தடுப்பதோடு, மேற்படி கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO