திருச்சி தனியார் நிறுவன பெண்களை கிண்டல் செய்யும் கும்பல்-நூற்றுக்கணக்கானோர் இரவில் கூத்து கும்மாளம்

Mobs teasing Trichy private company women Hundreds people throng night

திருச்சி தனியார் நிறுவன பெண்களை கிண்டல் செய்யும் கும்பல்-நூற்றுக்கணக்கானோர்  இரவில் கூத்து கும்மாளம்

திருச்சி ஜேம்ஸ் ஸ்கூல் எதிர்ப்புறம் தனியார் ஐடி நிறுவனம், வணிக வளாகங்கள் கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்திற்கு முன்பாக தினமும்  மாலை 7 மணிக்கு மேல் இளைஞர்கள் சிலர் கும்பலாக அமர்ந்து கொண்டு கூச்சலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த கட்டிடத்தில் உள்ள ஒமேகா தனியார் நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த பெண்களிடம் கிண்டல் செய்வது சைகை செய்வது என பல்வேறு செயல்களை செய்வதாக காவல்துறைக்கு ஏற்கனவே தகவல்கள் கொடுக்கப்பட்ட பொழுது தப்பி ஓடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இரவில் அங்குள்ள சில கடைகளை மிரட்டுவது தள்ளுவண்டிக் கடைகளில் தின்பண்டங்களை தின்றுவிட்டு காசு கொடுக்காமல் இருப்பது என தொடர்ந்து இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.


இந்த நிலையில் இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி மூன்று பேருக்கு மாலை போட்டு பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டியதாக கூறப்படுகிறது. கும்மாள காட்சிகள் அனைத்தும் சிசிடிவி மூலம், காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த இளைஞர்கள் அதிகமானோர் இங்கே கூடுவதால் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து இவர்கள் இப்பகுதியில் கூடாமல் இருக்கவும் வேலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மற்ற கடைகள் கட்டிடம் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இரவு நேரங்களில் இது போன்று கூட்டமாக கூடி அதிக அளவு சத்தம் மீட்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அப்பகுதியில் செல்லும் பொது மக்களும் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.


இவர்களைப் பற்றி விசாரித்த பொழுது திருச்சி மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஏன் இவர்கள் இங்கே கூடி படியில் அமர்ந்து உள்ளனர் இது குறித்து காவல் துறை பலமுறை புகார் தகவல்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் அப்பகுதியில் உள்ளவர்கள் எழுதுகின்றனர்.

இரவு நேரத்தில் எப்படி இவ்வளவு இளைஞர்கள் கூடுவதை காவல்துறையினர் அனுமதிக்கின்றனர் உடனடியாக அப்பகுதியில் இளைஞர்கள் கூடுவதையும் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபவதை தடுக்கவும் மாநக காவல் ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர். பணிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision