சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்;தடுக்க வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை:

சுற்றித்திரியும் கால்நடைகளால்  விபத்து  ஏற்படும் அபாயம்;தடுக்க  வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை:

திருச்சியில் உள்ள புறநகர் பகுதிகளில் சர்வசாதாரணமாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இவற்றை யாரும் கண்டுக்கொள்வதில்லை. இதனால் பொதுமக்களுக்கு பெரும் போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயம் ஏற்படுகின்றது.

குறிப்பாக நாய்கள், மாடுகள்,குதிரைகள் ஆடுகள் போன்ற கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. திடீரென சாலையின் குறுக்கே வரும் கால்நடைகளால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

தினந்தோறும் 20பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

விபத்தில் சிக்கும் கன்றுக்குட்டிகளையும், மாடுகளையும் யாரும் காப்பாற்ற முன்வருவதில்லை. சாலையின் நடுவே உயிருக்குப் போராடும் இந்த கால்நடைகள் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதும் போது அவைகளும் பலியாவதோடு வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். திருச்சியில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எழுத்தளவில் மட்டுமே உள்ளது. சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தும் அதை யாரும் கண்டுக்கொள்வதில்லை.

பராமரிப்பின்றி சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிகளையும் யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை.

வாகனங்கள் மோதி நடக்கும் விபத்துகளை விட கால்நடைகளால் விபத்துக்கள் நடப்பது சமீபகாலமாக அதிகரித்து விட்டன எனலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் 65 வார்டுகளிலும் கால்நடைகளால் போக்குவரத்து பிரச்சனை இருக்கின்றது.

 உணவிற்காக சாலையின் ஓரத்தில் இருக்கும் குப்பை மேடுகளில் உணவினை தேடி கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன 

கொரானா ஊரடங்கு காலத்தில் இருந்து சாலைகள் வெறிச்சோடி இருந்த நிலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கான உடனடி தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கையாக வேட்பாளர்களுக்கு வைத்துள்ளனர். 

 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் 

 கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரச்சாரத்தின் போது தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn