தாய்மார்கள் முடிவு எடுத்து விட்டால் யாராலும் மாற்ற முடியாது - திருச்சியில் உதயநிதி பிரச்சாரம்
திருச்சி, உறையூர் பகுதியில், எம்.எல்.ஏ.,வும் தி.மு.க., இளைஞரணி செயலாருமான உதயநிதி, தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர்....
திருச்சியில், 80 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், முதன்மை செயலாளர் கே.என். நேருவை வெற்றி பெறச் செய்ததால், அவரிடம் நகர்ப்புற நிர்வாகத் துறை ஒப்படைக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்படுகிறது. உங்களிடம் ஓட்டு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து தி.மு.க., வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்வீர்கள்.
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற போது, கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது. மூன்று மாதம், கொரோனாவோடு போராடுவதாகவே இருந்தது. அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, 9 கோடி தடுப்பூசி போட்டதோடு, கொரோனா பொது முடக்க கால நிவாரணம் இரண்டு தவணையாக, 4,000 ஆயிரம் ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தி.மு.க., அரசு சொல்வதை செய்யும்; செய்வதைத் தான் சொல்லும். இந்த உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீதம் தாய்மார்கள் போட்டியிடுகிறீர்கள். நீங்கள் முடிவு எடுத்து விட்டால், யாராலும் மாற்ற முடியாது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி உறுதி என்றாலும், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கு, தி.மு.க.,வினர் பொறுப்பேற்று, தீவிரமாக செயல்பட வேண்டும்.
உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன், முதல்வர் ஸ்டாலின் மகனாக கேட்கிறேன், கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன்.
என பேசினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn