(POSH) கமிட்டி அமைக்க நாளை (02.09.2024) கடைசி நாள் - ஆட்சியர் தகவல்

(POSH) கமிட்டி அமைக்க நாளை (02.09.2024) கடைசி நாள் - ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டம் 2013-ன்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் (மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஜவுளிகடைகள்) தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிலையங்கள், சிறுகுறு நிறுவனங்கள் முதலான அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளக குழு அமைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்படும் பெண்கள் புகார்களை அளிக்க பாதுகாப்பு பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, உள்ளக குழு அமைக்காமல் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50,000/- வரை அபராதம் விதிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே (02.09.2024)-குள் இதுவரை உள்ளக குழு அமைக்காத அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளககுழு அமைத்து பாதுகாப்பு பெட்டி வைத்திட வேண்டும்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது..... திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் (POSH) பாலியல் தொந்தரவுகளை தடுப்பதற்கான கமிட்டி கமிட்டி (செக்ஸுவல் ஹரேஸ்மெண்ட் தடுப்பு கமிட்டி) அமைப்பதற்கு காலக்கடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேர் கமிட்டிகளை அமைத்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்கள் உள்ளது. அமைக்க தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அதற்காக சமூக நலத்துறை அலுவலர்கள் மூலம் கண்காணிப்பு தொடர்கிறது. கமிட்டி அமைத்து அதில் உள்ள உறுப்பினர்கள் மற்ற விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision