சட்டம் மற்றும் தணிக்கைக்கான ஆலோசனை மற்றும் சேவை மையம் - வந்துவிட்டது திருச்சிக்கு ZOLVIT..

சட்டம் மற்றும் தணிக்கைக்கான ஆலோசனை மற்றும் சேவை மையம் - வந்துவிட்டது திருச்சிக்கு ZOLVIT..

2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவெங்கும் சட்டம் மற்றும் தணிக்கைக்கான ஆலோசனை மற்றும் சேவைகாக இயங்கி வரும் அமைப்பு Zolvit (முன்பு vakilsearch என்று இயங்கி வந்தது) தற்போது திருச்சியிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரின் நண்பர் விஸ்வநாத் என்பவரும் இணைந்து Zolvit கான திருச்சி கிளையை ஆரம்பித்துள்ளனர். சட்டம் மட்டும் இல்லாமல் தணிக்கைக்கான இயங்கவிருக்கும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், நண்பர்களாக இணைந்து இதனை ஆரம்பித்ததற்கான நோக்கம் குறித்தும் அரவிந்த் அவர்களிடம் பேசினோம்.

'நான் மற்றும் என்னுடைய நண்பர் விஸ்வநாத் இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே கிட்டத்தட்ட 24 வருடங்களாக நண்பர்கள், பள்ளி, கல்லூரி முடித்ததும் எங்களுக்கென தனி தனி தொழில்கள் என செய்து வந்தோம், இரண்டு பேருமே LLB முடித்திருந்தததால் சட்டம் தொடர்பாக இயங்க வேண்டும் என ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டிருந்த நேரத்தில் தான் ZOLVIT அமைப்பு பற்றி தெரிந்துகொண்டோம். 14 வருடங்களாக இந்தியா முழுவதும் பல நிறுவனங்களுக்கு தணிக்கை செய்வது, சட்டரீதியான சேவைகள் புரிந்து வரும் அமைப்பை திருச்சிக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தோம்.

அதனால் Zolvit அமைப்பின் திருச்சி Brancise நாங்கள் எடுத்துள்ளோம். தில்லைநகர் நான்காவது கிராஸ்ஸில் அமைந்துள்ள எங்களின் அலுவலகத்தில், புதிதாக ஆரம்பிக்கும் கம்பெனிகளுக்கான பதிவு, ஜிஎஸ்டி வரி பதிவு, ஆண்டுதோறும் செய்ய வேண்டிய வருமான வரி பதிவு போன்ற சேவைகள் செய்து தருகிறோம். கூடவே புதிய விற்பனை பொருட்கள் கடைகள், உணவு பொருள் விற்பனைக்கான சான்றிதழ்கள் எடுத்து தருவது, pattern உருவாக்கி கொடுப்பது,

ட்ரேட்மார்க் தொடர்பான விவரங்களை எடுத்து கொடுப்பது என முக்கியமான நிறுவனங்களுக்கு தேவையான செக்யூரிட்டி சேவைகான பஸாரா லைசன்ஸ் எடுத்து தருவது போன்ற பணிகளை எஸ்க்க்ளுசிவாக செய்யவிருக்கிறோம் என்றவர். சட்ட சேவைகளை பொறுத்தவரை பரஸ்பரமாக தேவைப்படும் அனைத்து சட்ட சேவைகளும் செய்து தர உள்ளோம் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision