தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்ட மகளிர் அலகு மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து இன்று (15.07-2024) காமராசர் பிறந்த தினம், கல்வி வளர்ச்சி தினம் மற்றும் மரக்கன்று நடும் விழா இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினை முனைவர் வீ.கல்பனா தேவி, வரலாற்று இணைப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்பு நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் கா. வாசுதேவன் ஐயா அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

காமராஜர் பற்றியும், அவரது தொண்டினையும், மற்றும் மரங்கள் வளர்க்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கே.சி.நீலமேகம், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர், தண்ணீர் அமைப்பு செயல் தலைவர், மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரை வழங்கினார். தமிழரண் மாணவர்கள், திருச்சி மாவட்ட இணை செயளாளர் தி.தென்றல் தமிழரன் மாணவர்கள் பற்றிய அறிமுகவுரை ஆற்றினார்.

இளநிலை வரலாற்று இரண்டாமாண்டு மாணவி செல்வி க. சந்தியா நன்றியுரை வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision