திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தை இணைக்கும் சாலையில் முட்புதர்கள்- பொதுமக்கள் அச்சம்
Thorns Trichy Mukhombu tourist site
திருச்சியின் முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் சாலையில் முட்புதர்களால் ஏற்படும் சிரமம், மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் - சமூக ஆர்வலர் கோரிக்கை !!
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சிறந்த சுற்றுலா தளங்களில் வண்ணத்துபூச்சி பூங்காவிற்கு, முக்கொம்பிற்கும் முக்கிய இடமுள்ளது. அகண்ட காவேரியாக வரும் முக்கொம்பில் கொள்ளிடம், காவேரி என இரண்டாக பிரிந்து ஸ்ரீரங்கம் வரை தீவாக மாற்றுகின்றன.
இதில் முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை செல்லும் சாலை இரண்டுபுறமும் மரங்களும் தொடர்ந்து இரண்டு ஆறுகளும் இருப்பதால் பார்ப்பதற்கும், பயணப்படுவதற்கும் ரம்மியமான சூழலாக உள்ள நிலையில் தற்போது இந்த சாலையில் முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்து உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் பயணிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது,
இதுகுறித்து சமூக ஆர்வலர் அய்யரப்பன் அவர்கள் பேசுகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முக்கொம்பில் இடிந்து விழுந்த கொள்ளிடம் பாலத்தை சீரமைக்கும் பணியின் போது, முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை 7 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்பட்டது. 17.35 கோடி செலவில் போடப்பட்ட இந்த சாலை கடந்த வருடம் (2023) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்போது பெய்த மழையில் சாலையின் ஓரங்களில் முட்செடிகள் அதிகம் வளர்ந்து பயணிப்பவர்களுக்கு இடையூறாக உள்ளது, பலகோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டிருக்கும் சாலையில் இப்படியான இடையூறுகள் இருப்பது சுற்றுலாத்தலங்களை அணுகுவதற்கு சிரமம் உள்ளது.
மாவட்டத்திலேயே முக்கிய சுற்றுலா தலங்களை இந்த சாலையை வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் சீரமைக்கும் பட்சத்தில் இந்த சாலையே அழகான வியூவுடன் நல்ல சுற்றுலா மையமாக இருக்கும். கூடவே இந்த பகுதியில் போக்குவரத்து வசதியும் மேம்படுத்துவதும் இங்கு அவசியம், பஸ் மற்றும் ஆட்டோ போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision