பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்; கடிப்பதை கட்டுப்படுத்துமா மாநகராட்சி ?
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகுவது ஒரு புறம் இருந்தாலும், திருச்சி மாநகராட்சி வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு குறைத்தும், கடிக்கிறது. இந்த நிலையில் மனிதர்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள உடைமைகளை தெரு நாய்கள் சேதப்படுத்தி வருகின்றன.
திருச்சி மாநகரில் எடமலைப்பட்டிபுதூரில் தெரு நாய்கள் பெரும் தொல்லை கொடுத்து வருகின்றன. இரு சக்கர வாகனங்களின் சீட்களை கிழித்தும், செருப்புகள் மற்றும் வீட்டில் காயும் துணிகளை கிழித்தும் நாசப்படுத்துகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision